சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி 119 கிலோமீட்டர் தூரத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த வழித்தடத்தில் சுரங்கப் பாதைகள் அதிக அளவில் அமைய இருக்கிறது.

இதற்காக தற்போது மயிலாப்பூர் மற்றும் அடையாறு மேம்பாலங்கள் 50% அளவுக்கு இடிக்கப்பட இருப்பதாக மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அங்கு 50 சதவீதம் அளவுக்கு மேம்பாலம் இடிக்கப்பட இருக்கிறது. இதேபோன்று அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும் 50% அளவுக்கு இடிக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி அப்பகுதியில் செல்வதற்கு ஏதுவாக இரும்பு பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.