
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சான்றை தபால் மூலமாக வீட்டிற்கு அனுப்பும் பணி பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் மாதம் மட்டும் 2.41 லட்சம் ஓட்டுனர் உரிமம், வாகனச் சான்று அனுப்பியதில் 99 சதவீதம் உரியவரிடம் சேர்க்கப்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் மீதமுள்ள ஒரு சதவீதமும் சரியான விலாசம் இன்று திரும்பி வந்துள்ளது. எனவே உரிய முகவரியை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.