
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இன்று சாட்டையடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார். அதன்படி இன்று தன்னைத்தானே அவர் 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். அதன் பிறகு இனி 48 நாட்கள் இன்று முதல் விரதம் இருக்கப் போவதாகவும் பிப்ரவரி மாதத்தில் அறுபடை வீடுகளுக்கு சென்று முதல்வரிடம் முறையிட போவதாகவும் கூறியுள்ளார். அதே சமயத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரையில் இனி கால்களில் செருப்பு போட மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை தற்போது சாட்டையால் அடித்துக் கொண்டதற்கான காரணம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ் மரபில் சாட்டையடி என்பது இருக்கிறது. இந்த சாட்டை அடியை நான் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய கோபம் எல்லாம் காவல்துறை மீதுதான். காவல்துறை நடவடிக்கையால் பெண் மகிழ்ச்சி என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்த இந்த போராட்டம் கிடையாது எனவும் தவ வேள்வியாக இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் வருங்காலத்தில் இது தீவிரமாகும் என்றும் கூறியுள்ளார்.