இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்தில் நிதிச் சுமை ஏற்படாமல் இருப்பதற்காக பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தனியார் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதிச் சுமையை குறைக்க மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அரசின் பங்களிப்பு திட்டமாகும். இதில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் ஓய்வூதிய நிதிக்கு பிடித்தம் செய்யப்படும். இறுதியாக ஓய்வூதிய காலத்தில் ஒரு தொகை அவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர எந்த வங்கியையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 முதல் 70 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். பான் மற்றும் ஆதார் அட்டையுடன் வீட்டிலிருந்தே ரூ. 500 மட்டும் முதலீடு செய்து இந்த திட்டத்தில் இணையலாம்.