ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70 உயர்ந்து 700க்கும், அரை கிலோ வெண்ணெய் 15 உயர்ந்து 275க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்குவந்தது.

இந்த நிலையில் ஆவியின் நெய் மற்றும் வெண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் நேற்று உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், வெளிச்சந்தைகளில் தனியார் நெய் லிட்டருக்கு 960 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதைவிட ஆவின் நெய் விலை மிகவும் குறைவு தான். ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று விமர்சித்துள்ளார்.