கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த காட்டு யானை அந்த முதியவரை தாக்கம் முயன்றது.

உடனே செய்வதறியாது முதியவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் விடாமல் அவரை துரத்தி சென்று யானை முதியவரை தள்ளிவிட்டு காலால் மிதித்து சென்றது. இதனால் முதியவர் படுகாயமடைந்தார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.