
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடவுள்ளது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தனித்து களமிறங்கும். விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார். தனித்துப் போட்டியிட்டு தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை பெறும். இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் எனப் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார்.