பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ள நிலையில் பாமக கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமதாஸ் தான் ஏற்பாடு செய்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுத்ததாக ஒரு தகவல் பரவிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாசிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறியதாவது,
அன்புமணி கட்சி விதிகளுக்கு எதிராக செயல்படும் நிலையில் அவர் கூட்டி உள்ள பொதுக்கூட்டம் செல்லாது. பொதுக்குழு கூட்டம் பற்றி 15 நாட்களுக்கு முன்பாகவே உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தந்தையை உளவு பார்த்த ஒரே ஒரு மகன் அன்புமணி தான். என்னுடைய இல்லத்தில் அந்த ஒட்டு கேட்பு கருவியை வைத்ததே அன்புமணி தான் என்று குற்றம் சாட்டினார். மேலும் டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் ஒட்டு கேட்பு கருவியை வைத்தவர்கள் பற்றி புகார் கொடுத்த நிலையில் தற்போது அந்த கருவியை வைத்ததே தன்னுடைய மகன்தான் என அவர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
