மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில், நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51) என்ற தந்தை, தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை இரவு, ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிய பிறகு, வீட்டிற்கு வருவதற்காக  தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அவன் உள்ளே சிக்கிக்கொள்கிறான். இதைக் கண்டு பீதி அடைந்த ரிஷிராஜ், உடனடியாக ஜெனரேட்டர் அறைக்குச் செல்வதற்குள், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதே நேரத்தில், மின்சாரம் வந்ததால் லிப்ட் கதவு திறந்து, தேவன்ஷ் பத்திரமாக வெளியே வந்தான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த போதும், ரிஷிராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என கூறப்பட்டுள்ளது. மகனின் லிப்ட்டில் சிக்கியதால்  அதிர்ச்சி காரணமாகவே இதன் சம்பவம் நடந்து  இருக்கலாம் என கூறப்படுகிறது போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகனின் பாதுகாப்பை நினைத்து  தந்தை உயிரிழந்தது, எல்லோரையும் கண்களில் கண்ணீர் வரவைத்து.