காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரும், கே ஆர் எஸ் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பெறும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் வேலூர் காட்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.