தங்கம் விலை குறித்து நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகப் போர்ச் சூழலில் தங்கம் விலை உயரும் என்றாலும், தற்போது கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் விலை சரிந்து வருகிறது.
ஆனால், போர் முடிவுக்கு வரும்போது முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் பக்கம் திரும்புவார்கள் என்பதால், அப்போது தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உச்சமான விலையைத் தொடவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
