ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை அதன் சிஇஓவான எலான் மஸ்க் அவரது தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ் கார்ப்பின் லோகோவை மையமாக வைத்து எக்ஸ் (X) என்று மாற்றி இன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி, தற்பொழுது நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் (X) என மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, ட்விட்டரின் லோகோவான குருவி படமும் ‘X’ என மாற்றப்பட்டது. மேலும் வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் பிராண்டாக ‘X’ இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, எலான் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றி சில நாட்கள் நாய் படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையால் குழப்படைந்த ட்விட்டர் பயனர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரின் புதிய லோகோ நன்றாக இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.