20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் வாழ்ந்த காலத்தில் முள்ளம்பன்றி போல் இருக்கும் எகிட்னா என்ற முட்டையிடும் பாலூட்டி இனமும் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இது அழிந்து விட்டதாக கருதிய நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்தோனேசியாவில் மேற்கொண்ட பயணத்தில் நீண்ட மூக்கு கொண்ட எகிட்னாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.