நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 14 தவணை பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15 வது தவணைக்காக 18,000 கோடியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்.

இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த 12 கோடி விவசாயிகளில் 4 கோடி பயனாளிகள் தகுதியற்றவர்கள் என அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த திட்டத்தில் போலி நபர்களை கண்டறிந்ததன் மூலம் சுமார் 46 கோடியை மத்திய அரசு சேமிக்கிறது. இருந்தாலும் நான்கு கோடி பயனாளிகள் தகுதியற்றவர்கள் என அரசு நீக்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.