தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் பலரும் அவருக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது கட்சியில் இணைய போவதாகவும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் தான் விஜய் அவர்களின் கட்சியில் இணைய போவதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நான் திமுகவை வெறுக்கிறேன். வாரிசு அரசியலை வெறுக்கிறேன். நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறேன். டேய் உபிஸ் நான் விஜய் சாருடன் இணையப் போகிறேன் என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.