மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் காசிமிரா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு 15 வயது சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு நடந்து சென்று வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை தினசரி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதனைக் கேட்டு பெற்றோர்  அதிர்ச்சி அடைந்த நிலையில் மறுநாள் அந்த சிறுமி ஸ்கூலுக்கு செல்லும் சாலையில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது வழக்கம்போல அந்த நபர் வந்தார். அவர் சிறுமியை பின்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் பெற்றோர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவருடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அவரை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்து வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகிறது.