
இந்தியாவைப் பொறுத்த வரையில் வாகன பயணம் மேற்கொள்வதற்காக கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவற்றை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். இதனைத் தவிர வாடகைக்கு வீடு கேட்டு செல்வதும் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் நாகரீக கலாச்சாரத்திற்கு ஏற்ப வாடகைக்கு உங்களுக்கு காதலையும் கிடைப்பார்கள். அந்த அளவிற்கு இன்றைய கலாச்சாரம் மாறிவிட்டது. இந்த நிலையில் டேட்டிங் செல்ல விரும்பும் சிங்கிள் பசங்களுக்காக டெல்லியை சேர்ந்த திவ்யா கிரி என்ற இளம் பெண் ஆஃபர் அறிவித்துள்ளார்.
பசங்களுடன் காபி டேட்க்கு செல்ல 1500 ரூபாய், சாதாரண டேட்டிங் இரவு உணவு மற்றும் திரைப்படத்துடன் 2000 ரூபாய், குடும்பத்துடன் சந்திக்க 3000 ரூபாய், சமூக வலைத்தளங்களில் தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட 6000 ரூபாய் மற்றும் பத்தாயிரம் ரூபாய் என வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவை பார்த்த இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.