டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டினார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது 98 வது டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பிறகு  500 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் சாக் கிராலியை 500வது விக்கெட்டாக  வீழ்த்தினார் அஸ்வின். சர்வதேச அளவில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் படத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 21 டெஸ்டில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆனார். இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 100-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.  ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் ஒரு விக்கெட் மட்டுமே தொலைவில் இருந்தார், மேலும் சாக் கிராலியை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மைல்கல்லை எட்டினார். க்ராலி மற்றும் பென் டக்கெட் இடையேயான 90 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை தமிழக பந்துவீச்சாளர் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நம்பமுடியாத சாதனையை புரிந்ததற்கு வாழ்த்துகள், எங்களை பெருமைப்படுத்திய அஸ்வினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.