
இந்தியாவில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் மோடி வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் முதல் கட்டமாக டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்து பாரத் ரயில் தொடங்கப்பட்டது.
தற்போது மும்பையில் இருந்து சோலாப்பூர் மற்றும் சாய் நகர் சீரடி ஆகிய இரண்டு இடங்களுக்கும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. என் நிலையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக புதுடெல்லி- தௌசா – லால்சோட் சாலை பகுதியை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்பணித்தார். இந்த டெல்லி மற்றும் மும்பை இடையேயான விரைவு சாலை 1386 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான விரைவு சாலை ஆகும். இதன் மூலம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு பயணம் செய்யும் நேரம் 5 மணி நேரத்தில் இருந்து சுமார் 3.5 மணி நேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.