தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இமயமலைக்கு செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிபட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தற்போது அண்ணாமலை ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று டெல்லிக்கு சென்ற அண்ணாமலை உத்தரகாண்ட் வழியாக இமயமலை சென்றதாக கூறப்படுகிறது. அவர் கேதர்நாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட இருக்கிறார். அவர் இமயமலை பாபா கோவில்களிலும் வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய திடீர் ஆன்மீக பயணத்திற்கான தகவல்கள் மற்றும் காரணம் தெரியவரவில்லை எமது குறிப்பிடத்தக்கதாகும்.