இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து கௌரவ் என்ற இளைஞர் வந்துள்ளார்.

இவர் 23 நாட்கள் டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம் செய்த சென்னைக்கு வந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் டிக்கெட் பெற்று போட்டியை பார்த்துள்ளார். இந்த போட்டி முடிவடைந்த பிறகு அவர் அங்கிருந்து கிளம்பாமல் தோனியை நேரில் சந்தித்த பிறகுதான் கிளம்புவேன் என்று கூறியுள்ளார். மேலும் இவர் சேப்பாக்கம் மைதானத்தின் 9-வது கேட் நுழைவு  வாயிலில் தற்போது கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.