அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வெளி ஆட்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவோ கல்வி சாராத பணிகளுக்காகவும் அனுமதி இல்லை.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தி விட வேண்டும். நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி உண்டு. கட்டுமான தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு வளாகத்தில் தங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.