சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கியுள்ளார். இதில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சசிகுமாரின் இளைய மகனாக நடித்திருக்கும் சிறுவன் மம்பட்டியான் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதனை தொடர்ந்து மம்பட்டியான் பாடல் மீண்டும் ட்ரெண்டானது. இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் கூறியதாவது, மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்தியதற்கு அனுமதி பெறவில்லை. பலரும் என்னிடம் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மீது வழக்கு தொடருமாறு கூறினார்கள்.

பணம் கேட்கவும் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அந்த பாடல் மீண்டும் ஹெட் ஆனதற்கு நான் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.