கடந்த சில நாட்களாக “மோனிகா மோனிகா” என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வருகின்றனர். இளைஞர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் இந்தப் பாடலுக்கு ஏற்ப நடனமாடி, தங்கள் காணொளிகளை இணையத்தில் பகிர்ந்து மகிழ்கின்றனர். இதனால், இணையத்தில் இந்தப் பாடல் தொடர்பான பதிவுகள் பரவலாகப் பேசப்படுகின்றன.
இந்நிலையில், ஒரு பள்ளி ஆசிரியர் இந்த “மோனிகா மோனிகா” பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், ஆசிரியர் உற்சாகமாகவும், வெறித்தனமாகவும் நடனமாடுவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாணவிகளுடன் இணைந்து ஆசிரியர் கலகலப்பாக நடனமாடும் இந்தக் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
