
பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் செங்கல்வராயன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் மூன்றாம் வகுப்பு படிக்கும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டினர்.
கடந்த 5 நாட்களாக 5 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். அந்த மூன்றாம் வகுப்பு படித்து வந்த மனைவி பள்ளிக்கு செல்லாமல் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றபட்டார். இந்த நிலையில் போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் பெற்றோருடன் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிறுமி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.