
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தினர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு ஆசிரியர்கள் இல்லை என்றாலும் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாது என்பது இந்த சம்பவம் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.