சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் டீ சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அந்த கடையில் இருந்த நிலையில், அப்போது இளைஞர் அந்த இளம் பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் டீக்கடையில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து இளைஞர் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் தன்னுடைய உறவுக்காரர் என்று இளைஞர் தெரிவித்துள்ளார்.