இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் வைத்து இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணியை சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் விளையாடிய டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்களுக்கு மேல் அடித்து சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை எடுத்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டி20 சர்வதேச கிரிக்கெட் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 205 சிக்ஸர்கள் எடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மா முதல் இடத்திலும் 173 சிக்ஸர்கள் அடித்து நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் இரண்டாவது இடத்திலும் 158 சிக்ஸர்கள் அடித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முகமது வாசிம் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.