உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிபயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் பாய்ந்து விபத்து நடந்துள்ளது. மெயின்புரி – படாயூன் நெடுஞ்சாலையில் தரியாவ்கஞ்ச் அருகே மக பூர்ணிமாவை முன்னிட்டு கங்கையில் நீராடச் சென்ற பக்தர்களின் டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளத்தில் பாய்ந்தது.

சாலையில் கார் மீது மோதாமல் இருக்க முயன்ற டிராக்டரின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. கிராம மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தள்ளுவண்டி, சேறும் சகதியுமாக இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் எட்டாவின் ஜெய்த்ரா பகுதியில் உள்ள கிரியா பனராகாசா கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு  2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி மற்றும் போதுமான சிகிச்சையை உறுதி செய்யுமாறு கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.