
மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டி ஏற்பட்டு மூன்று மணி நேரம் ஆகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் ஏக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு உயிர்கள் பறிபோன நிலையிலும் அதனை பொருட்படுத்தாது மருத்துவர்கள் மற்றொரு பிரசவத்தை இருட்டில் மேற்கொண்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.