கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று நேற்று முன்தினமும் தம்பதிக்குள் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மல்லேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீட்டின் சுவரில் தன்னுடைய சாவுக்கு தன் மனைவி லட்சுமி தான் காரணம் என அவர் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் லட்சுமி எதற்காக தன் கணவனுக்கு தொல்லை கொடுத்தார் என்ற விபரம் வெளிவரவில்லை. ஆனால் லட்சுமி தன் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.