
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ்-வுடன் மோதினார்.
போட்டியின் முடிவில் வைஷாலி வெற்றி பெற யாகுபோவ் தோல்வியை சந்தித்தார். பொதுவாக செஸ் விளையாட்டின் போது விளையாட்டு தொடங்கும் போதும் முடிக்கும் போதும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் வைஷாலியுடன் யாகுபோவ் கைகுலுக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் யாகுபோவ் விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த X பதிவில் “அன்புள்ள செஸ் நண்பர்களே வைஷாலியுடன் விளையாட்டில் நடந்த சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன். மத காரணங்களுக்காக மற்ற பெண்களை நான் தொடுவதில்லை என்பதை இந்திய செஸ் வீரர்களுக்கும் பெண்களுக்கும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.