
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டியூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையில் இருந்த வேப்பமரம் முறிந்து அவரது தலை மீது விழுந்தது. இதனால் ரத்த காயங்களுடன் பாஸ்கர் துடிதுடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் தையல் போட வேண்டும் என்றும், ரத்தம் கட்டியுள்ளதாகவும் கூறிய நிலையில் மூன்று நாட்கள் ஆகியும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவர்கள் வந்து பார்க்கவில்லை என பாஸ்கர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பாஸ்கரை புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.