
சீனாவில் உள்ள யூங்காங் பகுதியில் சேர்ந்த ஹாங் என்ற நபர் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு யுவான் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார் சிகிச்சை முடிந்து 13 நாட்களில் ஹாங் இதய செயலிழப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் பல் மருத்துவமனைக்கு சென்ற ஹாங்கிற்கு ஒரே நாளில் 23 பற்களை எடுத்துவிட்டு உடனடியாக 12 பற்களை பொருத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து பல் மருத்துவரான சியாங்க் கோலின் கூறுகையில்,
“ஒவ்வொரு நபரை பொறுத்து அவர்களுக்கு எத்தனை பற்களை எடுக்க வேண்டும் என்பது மாறுபடும். ஆனால் ஒரே முறை 23 பற்களை எடுப்பது என்பது அதிகம்” எனக் கூறியுள்ளார்.