
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததால், அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பெண் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசுத்துறை மற்றும் அந்த மருத்துவர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் உத்தரவிட்டுள்ளது. இதில் அரசு சார்பில் ரூ.6 லட்சம், மருத்துவர் பிரபாகர் சார்பில் ரூ.40 லட்சம், மேலும் மீதமுள்ள தொகையை மருத்துவ பணியாளர்கள் சேர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.