நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு வந்தடைந்தார். பின்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில ஒப்பந்தங்கள் குறித்தும் உரையாடினார். இதனையடுத்து டெல்லியில் அவர் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களோடு இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். அதாவது கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் அவரோடு லாஸ்ட் டைலர், இந்திய வம்சாவளி நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல், கபில் தேவ் ஆகியோரும் கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி உள்ளார்கள்.
இதனையடுத்து இதுக்குஇரஹித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட நியூஸி., பிரதமர், “கிரிக்கெட் மீதான அன்பை விட வேறு எதுவும் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை ஒன்றிணைக்கவில்லை” என்று கூறியுள்ளார் . அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடியோடு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் நாங்கள் அதற்கு முன்பாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினோம். நல்ல வேளையாக நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. அப்படி நாங்க ஜெயித்திருந்தால் இரு நாடுகளுக்கு இடையேயான சந்திப்புகள் நடக்காமல் இருந்திருக்கும்” என்று சிரித்தபடி பேசியுள்ளார்.
View this post on Instagram
