பொதுவாக இரவு நேரத்தில் மினுமினுக்கும் மின்மினி பூச்சிகளை பலருக்கும் பிடிக்கும். அந்த பூச்சிகளை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சிறுவயதில் பலருக்கும் மின்மனி பூச்சிகளைப் பிடித்து விளையாடிய அனுபவம் இருக்கலாம். இந்நிலையில் மின்மினிப்பூச்சிகள் அழியும் அபாயம் இருப்பதாக தற்போது ஒரு ஆய்வு ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்றவைகளின் காரணமாக அந்த பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறதாம். இதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1-2 சதவீதம் அளவுக்கு குறைந்து வருகிறதாம். மேலும் இதன் காரணமாக மின்மினி பூச்சிகளை காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.