
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) ரத்து செய்யும் முடிவை எடுத்தது.
இதையடுத்து, இந்தியா திடீரென ஜெலம்மு ஆற்றில் நீரை திறந்து விட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இன்று மதியம், சக்கோத்தி எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள ஜெலம்மு ஆற்றில் திடீரென நீர் மட்டம் கூடியதாக முஜப்பராபாத் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் (POK) முஜப்பராபாத் பகுதிகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்த வகையில் ஹட்டியன் பாலா, கரி துபட்டா, மஜோய், முகப்பராபாத்து உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிப்பைத் தவிர்க்க, ஆற்றங்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மசூதிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.