
பிரபல இயக்குனரான ஞானவேல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அடுத்ததாக ஞானவேல் ராஜா தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம் பிரபல சரவணபவன் உரிமையாளரான ராஜகோபாலின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து அந்த படம் இயக்கப்பட உள்ளது. பிரபல கன்னட இயக்குனரான ஹேமந்த்ராவும் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படவுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.