
கர்நாடக மாநிலத்தில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய முன்னாள் மனைவியை இவர் தற்கொலைக்கு தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக மஞ்சுநாத் மீது மற்றும் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அவருக்கு 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் பெண்ணின் உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் சில நாட்களுக்கு முன்பாக ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திடீரென மஞ்சுநாத் வீட்டிற்கு அவர்கள் சென்றனர். அவர்கள் வீட்டில் இருந்த மஞ்சுநாத்தை அடித்து கொலை செய்தனர். மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.