தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் உள்ளிட்ட பட குழுவினர் அர்பைஜான் சென்ற நிலையில் அதற்கு முன்னதாக நடிகர் அஜித் துபாயில் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். அவர் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.