இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன.

இந்நிலையில் இந்திய கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்தினால் 20% TCS (Tax collected at Source) வரி உடனடியாக விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுவரையில் இப்படியான செலவினங்களுக்கு எந்தவித வரிகளும் விதிக்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 20% TCS அறிவிக்கப்பட்டுள்ளது.