தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 3ஆவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், அரசே வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பதை மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்