
மகராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (34). இவர் சந்தியா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்தது வினோத்குமாருக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவர் தன் காதலியுடன் அடிக்கடி தகறாறு செய்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஹோட்டலில் வைத்து தன் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.
அதன் பிறகு வினோத்குமார் தப்பி ஓடிய நிலையில் அவர் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இந்த வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் போது சந்தியா மாடர்ன் உடைகளை அணிந்தது மற்றும் பிறருடன் அவர் பேசும்போது வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டது போன்றவைகள் குற்றங்களாக நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை குற்றவாளி என நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.