
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இணையத்தில் உள்ளது. குறிப்பாக திருமண வீடியோக்கள் அதிகளவு பகிரப்படும் நிலையில் தற்போது ஒரு ஃப்ரீ வெட்டிங் சூட் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்கு ஆடம்பரமான இடத்தை தேர்வு செய்யாமல் உடற்பயிற்சி கூடத்தை தேர்வு செய்துள்ளார். அந்தப் பெண் சேலை அணிந்து மணமகளைப் போல முழு அலங்காரத்துடன் ஃப்ரீ வெட்டிங் சூட்டை ஜிம்மில் செய்வதற்கு வந்துள்ளார். அங்கு அவர் டம்பெல்ஸ் தூக்கி உடற்பயிற்சி செய்வதை போல போட்டோ சூட் எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
वैसे भी शादी से डर लगता है और ऐसा प्री वेडिंग शूट देखकर तो आत्मा कांप गई 😂 pic.twitter.com/wN4FrN0NiU
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) November 15, 2023