இந்தியாவில் மக்கள் அனைவரும் தனித்தனியாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ஒரே வரி விதிப்பு முறையை கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த நிலையிலும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒதுக்கி தரும் என உத்திரவாதம் வழங்கியது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி விதிகள் அமலுக்கு வருகின்றன.

இதில் 5 கோடி ரூபாய்க்கு மேல் turn over உள்ள வணிக நிறுவனங்கள் வணிக பரிவர்த்தனைகளுக்கு இ- இன்வாய்ஸ் வழங்காமல் Eway – பில்களை வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை கொண்டு செல்ல இது அவசியம். இ -இன்வாய்ஸ் தகுதி உள்ள வரி செலுத்துவோர் மற்றும் வர்த்தக ஏற்றுமதியில் கீழ் விநியோகம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும். இருந்தாலும் நுகர்வோர் அல்லது பிற சப்ளையர் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இதற்கு முன்பு போலவே ஈவே பில் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது