மும்பை விக்ரோலி கிழக்கு பகுதியில் மே 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், நாராயண் போதே பாலம் அருகே, 21 வயது இளம் பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஐபோன் பறித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. புகாரளித்த பெண் தனது தங்கையுடன் வெளியே சென்று ரீல் வீடியோ எடுத்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது ஆப்பிள் ஐபோன் 13-ஐ தனது தங்கையிடம் வீடியோ எடுக்க ஒப்படைத்திருந்தார். அந்த நேரத்தில், ஒரு இளைஞர் அமைதியாக வந்து அந்த போனை பறித்துத் தப்பினார்.

பின்னர், அருகிலிருந்த கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் காத்திருந்த அவரது கூட்டாளியுடன் மும்பை நோக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது தந்தையை அழைத்து, விக்ரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, விக்ரோலி போலீசார் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள், இவ்வாறான தனிநபர் தாக்குதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.