தர்மபுரியில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

தர்மபுரி அருகே தடங்கம் என்னும் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தர்மபுரியை சேர்ந்த பூ வியாபாரி சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கோகுல்(14) இந்த போட்டியின் போது காளை முட்டி காயமடைந்து  உயிரிழந்தான். வாடிவாசல் வழியாக காளைகள் வெளியேறும் இடத்தின் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில் சிறுவன் கோகுலின் கண்களை தானமாக கொடுக்க இருக்கின்றோம் என அவரது தந்தை சீனிவாசன் கூறியுள்ளார்.