உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கடந்த வருடங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். தற்போது 2023 ஆம் வருடம் துவங்கிய நிலையில், பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தொடங்கி 1 மாத காலத்திற்குள் Amazon, Google, MicroSoft, Meta உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து உள்ளனர்.
இந்த பணி நீக்கம் பற்றி நிறுவனத்தின் CEO அதிகாரிகள் விளக்கம் தெரிவித்து உள்ளனர். தற்போது Amazon நிறுவனத்தில் CEO பணிநீக்கம் பற்றி கூறியதாவது, பொருளாதார மந்தநிலை மற்றும் அதீத ஊழியர்கள் உள்ளதால் நிறுவனத்தில் 18000-க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு ரோபோட்டிக்ஸ் பிரிவை மூடுவதாகவும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து Google நிறுவன CEO தன் மின் அஞ்சலில் கூறியிருப்பதாவது, எதிர் காலம் பற்றி கவலைக்கொள்ளாமல் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியதால் தற்போது பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். இதேபோல் MicroSoft, Metta ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சியை நம்பி அதிக ஊழியர்களை பணியமர்த்தி இருப்பதாகவும், தற்போது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியுள்ளதாகவும் நிறுவன CEO அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.