ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹோன்ஸு அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டொயாமா, யமாகாடா, ஹுயொகோ உள்ளிட்ட இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் விரைவாக வெளியேற வேண்டும் என ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ஜப்பானை தொடர்ந்து ரஷ்யா, போஸ்னியா ஹெர்சகோவினாவிலும் நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, வட கொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள கடலோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.

ஜப்பானில் உள்ள இந்தியர்கள் + 81 -80- 3930 -1715 , +81 -70- 1492 -0049, + 81 -80- 3214- 4734, +81 -80- 6229- 5382, + 81 -80- 3214- 4722 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் [email protected]  மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஜப்பானில் உள்ள இந்தியர்கள் உள்ளூர் அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானில் அவசரகட்டுப்பாட்டு அறையைத் திறந்தது இந்திய தூதரகம். ஜப்பான் அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தொடர்பிலிருந்து அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாக்க அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.